- ஒடிசாவில் DGP களின் தேசிய மாநாடு
- பிரதமர் மோடி
- புவனேஷ்வர்:
- அனைத்து மாநில போலீஸ் டிஜிபிஎஸ் மாநாடு
- ஒடிசா
- அனைத்து மாநில காவல்துறை டிஜிபி மற்றும்
- ஐஜிசி மாநாடு
புவனேஷ்வர்: ஒடிசாவில் அனைத்து மாநில போலீஸ் டிஜிபிக்கள் மாநாடு இன்று தொடங்குகின்றது. இதனை முன்னிட்டு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது. ஒடிசாவில் அனைத்து மாநில போலீஸ் டிஜிபி, ஐஜிக்கள் மாநாடு இன்று தொடங்குகின்றது. இந்த மாநாடு தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் இந்த மாநாட்டை சீர்குலைப்பதற்காக காலீஸ்தானி பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் மிரட்டல் விடுத்துள்ளான். இது தொடர்பாக கூடுதல் இயக்குனர் ஜெனரல் சஞ்சய் குமார் கூறுகையில், ‘‘அனைத்து அச்சுறுத்தல்களையும் நாங்கள் அறிந்துள்ளோம். விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம். எந்த அசாம்பாவித சம்பவங்களும் நடக்கவில்லை என்பதை நாங்கள் உறுதி செய்வோம். மாநாடு நடக்கும் இடம் மற்றும் பிற முக்கிய இடங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமருக்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு இருக்கும்” என்றார்.
The post ஒடிசாவில் டிஜிபிக்கள் தேசிய மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு appeared first on Dinakaran.