- நாகை, கடலூர்
- இலங்கை
- நாகப்பட்டினம்
- மாவட்டம்
- ஆகாஷ்
- நாகபட்டினம் துறைமுகம்
- சிவகங்கை
- நாகை, கடலூர் துறைமுகங்கள்
- தின மலர்
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கப்பட்டது. 150 பயணிகளுடன், வாரத்திற்கு மூன்று முறை இரண்டு வழிகளிலும் ‘சிவகங்கை’ என்ற பெயருடன் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு கடல்சார் வாரியம் மாலத்தீவுகள், இலங்கை யாழ்ப்பாணம், இலங்கை காங்கேசன்துறை உள்ளிட்ட இடங்களுக்கு கடலூர், நாகப்பட்டினம் துறைமுகங்களில் இருந்து விரைவில் சரக்கு கப்பல் போக்குவரத்து கையாளுவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது.
சந்தை நிலவரப்படி இலங்கைக்கு வேளாண் பொருட்கள், மீன்சார் பொருட்கள் மற்றும் மற்ற நுகர்வு பொருட்கள் போன்ற 75 ஆயிரம் மெட்ரிக்டன் சரக்குகள் ஆண்டு ஒன்றுக்கு கையாள வாய்ப்புகள் உள்ளது. இது அடுத்து வரும் ஆண்டுகளில் பன்மடங்காக அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது. கடலூர் மற்றும் நாகப்பட்டினம் துறைமுகங்களில் சிறிய அளவிலான பாய்மர கப்பல்கள் கையாளுவதற்கு தேவையான கட்டமைப்புகளுடன் சுங்கம், சுகாதாரத்துறை அனுமதிகளுடன் தயாராக உள்ளது.
இதனால் சரக்கு இறக்குமதி ஏற்றுமதியாளர்கள் நாகப்பட்டினம் மற்றும் கடலூர் துறைமுகங்களில் அமைந்துள்ள வசதிகளை பயன்படுத்தி சரக்கு, இறக்குமதி ஏற்றுமதி செய்து குறைந்த செலவில் சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம், கூடுதல் தகவல்களுக்கு துறைமுக அலுவலர்களை 94422 43225 (கடலூர்), 94425 59978 (நாகை) என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
The post நாகை, கடலூர் துறைமுகங்களில் இருந்து இலங்கைக்கு விரைவில் சரக்கு கப்பல் இயக்கம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.