×
Saravana Stores

இன்று முதல் டிச.18ம் தேதி வரை நாகை-இலங்கை கப்பல் சேவை நிறுத்தம்

நாகப்பட்டினம்: வானிலை முன்னெச்சரிக்கையால் நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை இன்று முதல் டிசம்பர் 18ம் தேதி வரை நிறுத்தப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கடந்த ஆகஸ்ட் 16ம்தேதி பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கியது. தினந்தோறும் இயங்கிய சிவகங்கை பெயர் கொண்ட கப்பல், போதிய அளவு பயணிகள் இல்லாத காரணத்தால் செவ்வாய், வியாழன், ஞாயிற்றுகிழமைகளில் இயக்கப்பட்டது. இந்நிலையில் பயணிகள் வருகை அதிகரித்த காரணத்தால் அக்டோபர் 21ம்தேதி முதல் சனிக்கிழமைகளிலும் இயக்கியது.

பின்னர் நவம்பர் 8ம்தேதி முதல் செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் இயக்கப்பட்டது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக இன்று முதல் டிசம்பர் 18ம் தேதி வரை பயணிகள் கப்பல் சேவை நிறுத்தப்படுகிறது. மீண்டும் டிசம்பர் 18ம்தேதிக்கு பின்னர் கப்பல் சேவை தொடங்கப்படும். இதில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் தெரிவிக்கப்படும் என கப்பல் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இன்று முதல் டிச.18ம் தேதி வரை நாகை-இலங்கை கப்பல் சேவை நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Nagai ,Sri Lanka ,Nagapattinam ,Sri Lanka Kangesan sector ,Nagai- ,Dinakaran ,
× RELATED நாகை கடல் பகுதியில் இருந்து இலங்கை...