×
Saravana Stores

சாலை ஆய்வாளர் பதவிக்கான மதிப்பெண், தரவரிசை பட்டியல்: டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு


சென்னை: டிஎன்பிஎஸ்சி அமைப்பானது, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் உள்ள சாலை ஆய்வாளர் பதவியில் காலியாக உள்ள 957 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வை கடந்த மே 7ம் தேதி நடத்தியது. இதில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் அத்தேர்வுகான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் இருவழி தொடர்பு முறையில் மதிப்பெண் மற்றும் தரவரிசைக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட 931 தேர்வர்களின் பதிவெண் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைத்தளம் www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு மேலாளர் (கால்நடை) பதவியில் நிரப்பப்படாத 4 காலி பணியிடங்களுக்கான 3ம் கட்ட நேர்முக தேர்வுக்கு தற்காலிகமாக 12 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிறுவனம் பதவியை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வு (நேர்முக தேர்வு பதவிகள்) நிரப்பப்படாத 3 காலி பணியிடங்களுக்கான 3ம் கட்ட நேர்முக தேர்வுக்கு தற்காலிகமாக 9 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பதிவெண் கொண்ட பட்டியலும் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தகவலை டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளார்.

The post சாலை ஆய்வாளர் பதவிக்கான மதிப்பெண், தரவரிசை பட்டியல்: டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : TNPSC ,CHENNAI ,Rural Development ,Panchayat Department ,Dinakaran ,
× RELATED தேர்வர்கள் தேர்வுக்கு...