- பல்லவ தோட்டம்
- சட்டமன்ற உறுப்பினர்
- Thambaram
- திருப்பணி நகர்
- பல்லாவரம் சட்டமன்றம்
- அசோகா பூங்கா
- தின மலர்
தாம்பரம்: பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருத்தணி நகர், பல்லவா கார்டன் பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள அசோகா பூங்கா பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே பூங்காவை சீரமைத்து பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சார்பில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதியிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில், ரூ.1 கோடி மதிப்பீட்டில் நடைபாதை, மின் விளக்குகள், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், கழிவறை உள்ளிட்ட வசதிகளுடன் பூங்கா சீரமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகளை பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி நேற்று தொடங்கி வைத்தார்.
The post பல்லவா கார்டன் பகுதியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் பூங்கா சீரமைப்பு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.