கொடைக்கானல்: போதிய விளைச்சல் இல்லாததால் கொடைக்கானல் மலை பூண்டு விலை அதிகரித்து ஒரு கிலோ ரூ.400 முதல் ரூ.600 வரை விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொடைக்கானலில் மேல்மலை கிராமங்களான வில்பட்டி, பள்ளங்கி, மன்னவனூர், பூண்டி, பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மலை பூண்டு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. பாரம்பரிய வகை மற்றும் அதிக மருத்துவ குணம் கொண்டது என்பதால் கொடைக்கானல் மலை பூண்டுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் தொடர் மழை, சீதோஷ்ண நிலை மாற்றம் போன்ற காரணங்களால் மலை பூண்டு விளைச்சல் குறைந்துள்ளது. புவிசார் குறியீடும் வழங்கப்பட்டு இருக்கும் மலை பூண்டு விலை கிலோ ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனையாகிறது. விளைச்சல் பாதித்தாலும் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். வட மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் பூண்டின் விலை கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனையாகிறது. இதனால் சந்தையில் நல்ல வரவேற்பு உள்ள கொடைக்கானல் மலை பூண்டின் விலை கடந்த 5 மாதங்களாக ஏறுமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post கொடைக்கானல் மலைப்பூண்டு விலை 5 மாதங்களாக ஏறுமுகம்: ஒரு கிலோ ரூ.600 வரை விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.