×
Saravana Stores

கடல் மட்ட உயர்வால் 2100ம் ஆண்டில் பிச்சாவரம், முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் காணாமல் போகும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

சென்னை: 2100ம் ஆண்டில் கடல் மட்ட உயர்வால் பிச்சாவரம், முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் காணாமல் போகும் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் பிச்சாவரம் அலையாத்தி சதுப்பு நில வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதி உலகின் இரண்டாவது பெரிய சதுப்பு நிலக்காடுகள் ஆகும். இந்த வனம் இரண்டு முக்கியமான நதிகளின் முகத்துவாரமான வடக்கில் வெள்ளாறு சரணாலயத்திற்கும், தெற்கில் கொள்ளிட கரை ஓரத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. சுமார் 3,000 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த சதுப்பு நிலத்தில் இழு படகு, படகு சவாரி போன்ற ஏராளமான நீர் விளையாட்டுகள் சுற்றுலாப் பயணிகளை கவர்கிறது.

பிச்சாவரம் அலையாத்தி காடுகள் 413 ஹெக்டர் அளவில் உள்ளது. அதேபோல் முத்துப்ேபட்டை பகுதியில் உள்ள அலையாத்தி காடுகள் 2382 ஹெக்டேர் அளவில் உள்ளது. இந்நிலையில் அதிகப்படியான உமிழ்வால் கடல் மட்டம் உயர்வு காரணமாக 2100ம் ஆண்டில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அலையாத்தி காடு மற்றும் பிச்சாவரம் அலையாத்தி காடுகள் காணாமல்போக வாய்ப்புள்ளதாக ஆய்வுகளில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலில் அலையாத்தி காடுகள் மூழ்குவதால் அந்த காட்டுப்பகுதிகளில் இருக்கும் அதிகப்படியான கார்பன்கள் சுற்றுச்சூழலில் கலந்து பாதிப்பை ஏற்படுத்தும். 2.24 டிராகிராம் கார்பன் வெளியாகும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் அங்குள்ள மீன்கள் கடல்சார் உயிரினங்கள் மற்றும் அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கடல் மட்ட உயர்வால் 2100ம் ஆண்டில் பிச்சாவரம், முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் காணாமல் போகும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Tags :
× RELATED திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் மழை காரணமாக ஒத்திவைப்பு