- திருப்பூர்
- அகில இந்திய பார் அசோசியேஷன்
- மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- புதுச்சேரி
- நீதிமன்றம்
- தின மலர்
திருப்பூர், நவ.28: திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் நேற்று கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர வேண்டும், நீதிமன்ற வளாகத்தில் குழந்தைகள் காப்பகம் அமைக்க வேண்டும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வழக்கறிஞர் சங்கங்களில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும், பாலியல் சீண்டல்களில் இருந்து பாதுகாக்க அனைத்து நீதித்துறை அலுவலகங்களில் விசாகா புகார் கமிட்டி அமைக்க வேண்டும், இருபால் இளம் வழக்கறிஞர்களுக்கும் மாத உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் வழக்கறிஞர் தமயந்தி, அமர்நாத், மணவாளன் மற்றும் பொன்ராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வட்டாட்சியருடன் வாக்குவாதம் கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல அனுமதிக்க வேண்டுமென பட்டுக்கோட்டையார் நகர் பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தெற்கு வட்டாட்சியர் மயில்சாமி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, வாரந்தோறும் இதே பிரச்சனைக்காக தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருக்கிறீர்கள் என பேசியதாக கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த பொதுமக்கள் வட்டாட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் போராட்டம் நடக்கும் பகுதியில் வட்டாட்சியர் இருக்கக் கூடாது, திரும்பிச்செல்ல வேண்டும் என கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் பொதுமக்களை சமரசம் செய்தனர்.
The post திருப்பூர் நீதிமன்றத்தில் கையெழுத்து இயக்கம் appeared first on Dinakaran.