- ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனை
- ஈரோடு
- காங்கிரஸ்
- ஈரோடு கிழக்குத் தொகுதி
- சட்டமன்ற உறுப்பினர்
- EVKS
- இளங்கோவன்
- சென்னை
- முன்னாள்
- மாநில தலைவர்
- தமிழ்நாடு காங்கிரஸ் குழு
- ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ்
- இளங்கோவன் மருத்துவமனை
- தின மலர்
ஈரோடு: காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் (76) உடல்நிலை பாதிப்பால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக பதவி வகித்து வருபவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவருக்கு கடந்த அக்டோபர் 31ம் தேதியில் இருந்தே காய்ச்சல் பாதிப்பு இருந்தது. மருத்துவர்கள் ஆலோசனை பெற்று வீட்டில் ஓய்வில் இருந்தார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் கடும் சளியால் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
The post ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.