புதுவை: ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வேட்டையாடும் சமூகமாக இருந்த போது மனிதர்கள் தீட்டிய ஓவியத்தை அச்சுஅசலாக கண்முன் கொண்டு வந்து அசத்தி உள்ளனர் புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள். வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் மனிதர்களின் வாழ்கை எப்படி இருந்தது என்பதை காட்டுகிறது கண்ணாடி பாறை ஓவியங்கள். கூட்டமாக வேட்டையாடி கொண்டிருந்து வாழ்ந்ததற்கான தடயங்களை பாறைகளிலும், குகைகளிலும் ஓவியங்களாக விட்டுச்சென்றுள்ளனர். இந்த ஓவியங்களை தத்துரூபமாக கண்முன் கொண்டுவரும் விதமாக புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூட நுண்கலை மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. விதவிதமான பெயிண்ட், ஸ்பிரே என ஓவியக்கலை மாறியிருக்கும் சூழலில் இயற்கை வண்ணத்தில் தீட்டப்பட்ட இந்த ஓவியங்களை தத்ரூபமாக கொண்டுவருவது சவாலாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கூட இருக்கின்றன. பெரும்பாலும் இவை அனைத்தும் கூட்டமாக சேர்ந்து வேட்டையாடுவது, மகிழ்வது அவர்கள் பார்த்த விலங்குகள் இவற்றையே ஓவியமாக திட்டிவிட்டு சென்றுள்ளனர். அடர்ந்த காடு, மலை உச்சிகளில் இருக்கும் இந்த ஓவியங்களை பார்ப்பது அரிது. மிக அரிதான ஓவியங்களை பார்த்து அச்சூழலை கற்பனை செய்து ஓவியம் தீட்டும் புது உணர்வை பெற்றிருக்கின்றனர். என்னதான் பாடத்திட்டத்தில் அனைத்தும் இருந்தாலும் அதை நேரில் பார்பதைபோல உணர்ந்து செயல்படும் போது வரும் உணர்வு மாணவர்களின் கற்பனை திறனை மேலும் அதிகரிக்கும் என்று இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த பல்கலைக்கூட முதல்வர் அன்னபூர்ணா கூறியுள்ளார். பாறை ஓவியங்கள் பற்றி பாடங்களில் மட்டுமே படித்துவந்த மாணவர்கள் முதல்முறையாக வரைந்து பார்க்கும் படிப்பினையை பெற்றிருக்கின்றனர்.
The post நுண்கலை மாணவர்களுக்காக 3 நாட்கள் சிறப்பு பயிற்சி: பாறை ஓவியங்களை மீள் உருவாக்கம் செய்து புதுவை பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள் அசத்தல் appeared first on Dinakaran.