- சென்னை
- அமைச்சர்
- KKSSR ராமச்சந்திரன்
- மாநில கட்டுப்பாட்டு மையம்
- எழிலகம், சென்னை
- வளிமண்டலவியல் திணைக்களம்
சென்னை: சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் நேற்று அளித்த பேட்டி: தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு நிவாரண பணிகளை மேலும் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை முன்னெச்சரிக்கையாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மழைநீர் வாய்க்கால்களில் தேங்கும் நீரை உடனே வெளியேற்றும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. துணை முதல்வரும் நேற்று நேரடியாக சென்னையில் பல இடங்களுக்கு சென்று ஆய்வு செய்துள்ளார்.
பொதுவாக முதல்வர் என்ன சொல்லியுள்ளார் என்றால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் பாதிதான் உள்ளது. மழை நீரை சேமிக்க வேண்டும், அதே நேரம் தண்ணீரை வெளியேற்றும்போது மக்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். அதை ஏற்று, சரியான அளவுக்கு நாங்களும் நிர்வாகம் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post சென்னை ஏரிகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றினால் பொதுமக்கள் பாதிக்காத அளவுக்கு நடவடிக்கை: அமைச்சர் பேட்டி appeared first on Dinakaran.