- அஇஅதிமுக
- சிராமலை அடிகளார்
- எடப்பாடி
- சென்னை
- பொது
- எடப்பாடி பழனிசாமி
- லலிதா
- பி.காம்
- தஞ்சாவூர், கீசல்வாசல், டபீர்குளம்
- ஆதிமலை அடிகளார்
- தின மலர்
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: புகழ் பெற்ற தமிழறிஞரும், `தமிழ் தந்தை’ என போற்றப்படுபவருமான மறைமலை அடிகளாரின் பேத்தியும், பி.காம் பட்டதாரியுமான லலிதா, தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தஞ்சாவூர், கீழவாசல், டபீர்குளம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும், வீட்டு வாடகை கொடுப்பதற்கு கூட போதிய வருமானம் இல்லாமல் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாகவும் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
அதிமுக ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஏழைகளுக்காக பாடுபடும் பேரியக்கமாகும். அந்த வகையில், `தமிழ் தந்தை’ மறைமலை அடிகளாரின் பேத்தி லலிதாவின் குடும்பத்திற்கு, அதிமுக சார்பில், குடும்ப நல நிதியுதவியாக 1,00,000 ரூபாய் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
The post மறைமலை அடிகளார் பேத்திக்கு அதிமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி: எடப்பாடி தகவல் appeared first on Dinakaran.