×
Saravana Stores

ஆத்துப்பாக்கம் கிராமத்தில் ஐயப்பனுக்கு விளக்கு பூஜை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் கிராமத்தில் ஆண்டுதோறும் சபரிமலை ஐயப்பனுக்கு விளக்கு பூஜை நடத்துவது வழக்கம். அதன்படி 10ம் ஆண்டை முன்னிட்டு ஆத்துப்பாக்கம், தேர்வழி, மங்காவரம், நத்தம், வழுதலம்பேடு, ரெட்டம்பேடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் ஐயப்ப திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். இதில் வண்ண மலர்களால் ஐயப்பன் சிலைக்கு மாலை அணிவித்து 18 படிகள் வண்ண விளக்குகளால் ஜொலித்தன. அதைத் தொடர்ந்து ஆத்துப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட சுமங்கலி பெண்கள் கைகளில் காமாட்சி அம்மன் விளக்குடன் ஆத்துப்பாக்கம் – ரெட்டம்பேடு சாலையையொட்டி உள்ள ஆரியத்தம்மன் ஆலயத்தில் இருந்து திருவீதி உலா வந்தனர். அப்போது வழிநெடுக்க கிராம மக்கள் ஆரியத்தம்மனுக்கு வழிபாடு செய்து தரிசனம் செய்தனர். பின்னர் அனைவரும் திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்டதையடுத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இறுதியில் சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

The post ஆத்துப்பாக்கம் கிராமத்தில் ஐயப்பனுக்கு விளக்கு பூஜை appeared first on Dinakaran.

Tags : Ayyappan ,Athupakkam village ,Kummidipundi ,Sabarimala ,Aathupakam village ,Ayyappa ,Athapakkam ,Tirvali ,Mangavaram ,Natham ,Pruthalambedu ,Retambed ,Ayyappa Thiruvalakku Puja ,Aathupakkam ,
× RELATED சகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ ஐயப்பன் கவசம்