சென்னை: நாட்டின் அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் தலைமை செயலகத்தில் நேற்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். நாட்டின் அரசமைப்பு சட்டம், அரசியல் நிர்ணய சபையால் ஏற்கப்பட்ட நாளான நவம்பர் 26ம் தேதி (நேற்று) அரசியலமைப்பு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் 75வது ஆண்டையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
அரசியலமைப்பு ஏற்கப்பட்ட நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அரசியலமைப்பு முகவுரையை வாசித்து உறுதிமொழி ஏற்றார். சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்வில் அமைச்சர்கள், தலைமை செயலாளர் முருகானந்தம் மற்றும் பல்வேறு துறை சார்ந்த செயலாளர்களும் அரசியலமைப்பு முகவுரையை வாசித்து அவர்களும் உறுதிமொழி ஏற்றனர்.
The post அரசியலமைப்பு தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.