×
Saravana Stores

அதிக கன மழை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு கடலூர் வந்தடைந்தன

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் அதிக கன மழை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு ஆகியவை வந்தடைந்தது. வங்கக்கடலில் உருவாகியுள்ள பெங்கல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதவி ஆய்வாளர் சஞ்சீவ் தேஸ்வால் தலைமையில் 25 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவும், உதவி ஆய்வாளர் ராஜகோபால் தலைமையிலான தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவும் கடலூர் வந்தடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமாரை சந்தித்து முகாமுக்கு சென்றடைந்தனர்

The post அதிக கன மழை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு கடலூர் வந்தடைந்தன appeared first on Dinakaran.

Tags : National Disaster Response Team ,Tamil Nadu Disaster Response Team ,Cuddalore ,Cuddalore district ,Bengal ,Bay of Bengal ,Dinakaran ,
× RELATED விளம்பர பதாகை விழுந்த சிசிடிவி கசிவு சிறப்பு எஸ்ஐ உள்பட 3 போலீசார் மாற்றம்