சென்னை: கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட ஏ.வி.எம். மயானபூமியில் எரிவாயு தகனமேடையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பொதுமக்கள் நெசப்பாக்கம் மற்றும் கண்ணம்மாபேட்டை எரிவாயு மயானபூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-135க்குட்பட்ட ஏ.வி.எம். மயானபூமியில் எரிவாயு தகனமேடையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால், 27.11.2024 முதல் 26.12.2024 வரை மேற்கண்ட மயானபூமியில் எரிவாயு தகனமேடை இயங்காது. எனவே, வேளச்சேரி இந்து மயானபூமியில் எரிவாயு தகனமேடையில் பராமரிப்பு நடைபெறும் நாட்களில், பொதுமக்கள் நெசப்பாக்கம் மற்றும் கண்ணம்மாபேட்டை எரிவாயு மயானபூமிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
The post கோடம்பாக்கம் மயானபூமி பராமரிப்பு பணி காரணமாக மூடல் appeared first on Dinakaran.