×
Saravana Stores

கனமழை எச்சரிக்கை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மேற்கொள்ளவிருந்த கள ஆய்வு ரத்து

சென்னை: கனமழை எச்சரிக்கை காரணமாக 28, 29,-ம் தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருந்த அரசு நிகழ்ச்சி மற்றும் கள ஆய்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரக்கூடிய பல்வேறு வளர்ச்சி பணிகளின் நிலை தொடர்பாக கள ஆய்வு மேற்கொள்ளகூடிய வகையில் பல்வேறு மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் 28, 29,-ம் தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்வதற்காக அவர் திட்ட்மிட்டிருந்தார். இந்த நிலையில் ங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வழுபெற்று சென்னை -நாகை இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து 28, 29,-ம் தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருந்த அரசு நிகழ்ச்சி மற்றும் கள ஆய்வு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post கனமழை எச்சரிக்கை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மேற்கொள்ளவிருந்த கள ஆய்வு ரத்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Viluppuram district ,Chennai ,MLA ,K. ,Stalin ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED அனைத்து குடிமக்களின் உரிமைகளை...