- அமைச்சர்
- செந்தில் பாலாஜி
- வட சென்னை
- சென்னை
- முதலமைச்சர்
- தமிழ்
- தமிழ்நாடு
- மின்சாரம்
- செந்தில்பாஜி
- தமிழக முதல்வர்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, (1X800 மெகா வாட்) வடசென்னை மிக உய்ய அனல் மின் திட்டம் நிலை – 3 ல் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (26.11.2024) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். கடந்த (07.03.2024) அன்று, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட (1X800 மெகா வாட்) வட சென்னை மிக உய்ய அனல் மின் திட்டம் நிலை 3ல் தற்போது சோதனை இயக்கத்திற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகள் குறித்து விரிவான ஆய்வினை மேற்கொண்ட அமைச்சர் அவர்கள், பொருளாதார ரீதியான மின் உற்பத்தி பணிகளை துரிதமாக முடித்து, வருகின்ற டிசம்பர் மாத இறுதிக்குள் முழுமையான மின் உற்பத்தியை தொடங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் நந்தகுமார், இ.ஆ.ப., இயக்குனர் (திட்டம்) கருக்குவேல் ராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post வடசென்னை மிக உய்ய அனல் மின் திட்டம் நிலை – 3ல் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு! appeared first on Dinakaran.