- வெண்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி
- பெரம்பலூர்
- வெம்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி
- வெப்பந்தாட்டு ஒன்றியம்
- பெரம்பலூர் மாவட்டம்
- தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை
- வெம்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி
பெரம்பலூர், நவ.26: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியம், வெண்பாவூர் அரசு உயர் நிலைப் பள்ளியில், தமிழ் கூடல் நிகழ்ச்சி நேற்று (25 ஆம்தேதி) நடைபெற்றது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ஒவ்வொரு பள்ளியிலும் தமிழ் கூடல் நிகழ்ச்சி நடை பெற வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக வெண்பாவூர் அரசு உயர் நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி பள்ளியின் தலைமை ஆசிரியை லதா தலைமையில் நடை பெற்றது. பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ராஜ ராஜன், பட்டதாரி ஆசிரியை மீனாம்பிகா, பாக்கிய லட்சுமி ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
தமிழாசிரியை ஸ்ரீதேவி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக வட்டார வளமைய அலுவலர் அஸ்மா பீ பங்கேற்றார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு பட்டதாரி – முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் மகேந்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் நடனம், திருக்குறள் ஒப்புவித்தல், எழுத்துக்களை கண்டறிதல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆசிரியர்கள் சீதா, சுமதி, கௌரி மனோகரி, ஏஞ்சலின், வாசுகி, பத்மாவதி ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தினர். இதில் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவியர் பள்ளி மேலாண்மைக் குழுவினர் திரளாகக் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் கனகராஜ் நன்றிகூறினார்.
The post வெண்பாவூர் அரசு உயர் நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் நிகழ்ச்சி appeared first on Dinakaran.