×
Saravana Stores

பொன்பரப்பி அரசு பள்ளியில் மகிழ் முற்றம் துவக்கம்

 

ஜெயங்கொண்டம், நவ.22: அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே தலைமை பண்பை வளர்க்கும் வகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என்னும் பெயர்களில் மாணவர் குழுக்கள் அமைத்து மகிழ் முற்றம் திட்டத்தை தலைமை ஆசிரியர் ஜோதிலிங்கம் தலைமையில் நடைபெற்றது. உதவி தலைமை ஆசிரியர் ரோஸ் தலைவர்களை தேர்ந்தெடுத்தார் . குறிஞ்சி குழுவின் தலைவராக முதுகலை தமிழ் ஆசிரியை கயல்விழி, முல்லை குழுவின் தலைவராக முதுகலை பொருளியல் ஆசிரியர் ஜெயராமன், மருதம் குழுவின் தலைவராக முதுகலை கணித ஆசிரியர் சங்கர், நெய்தல் குழுவின் தலைவராக பட்டதாரி தமிழ் ஆசிரியர் தமிழ்ச்செல்வி, பாலை குழுவின் தலைவராக பட்டதாரி ஆங்கில ஆசிரியர் ராஜா பொறுப்பேற்றனர். இருபால் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியை நாட்டு நலப் பணி திட்ட அலுவலர் பஞ்சாபகேசன், பட்டதாரி ஆசிரியர் பிரபாகரன் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தனர்.

The post பொன்பரப்பி அரசு பள்ளியில் மகிழ் முற்றம் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Ponparappi Government School ,Jayangkondam ,Ponparappi Government Higher Secondary School of Ariyalur ,Kurinji ,Mullai ,Marutham ,Neithal ,Balai ,headmaster ,Jyothilingam ,Dinakaran ,
× RELATED உடையார்பாளையத்தில் தமிழ்நாடு தமிழ்...