- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இருக்கிறேன்
- Wickramaraja
- சென்னை
- ஜனாதிபதி
- தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு
- எம்.
- தின மலர்
சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வணிகர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் தழுவிய அளவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட அளவில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் டிசம்பர் 11ம்தேதி புதன்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெற உள்ளது.
குறிப்பாக வாடகையின் மீதான 18% ஜிஎஸ்டி வரி விதிப்பு மற்றும் மாநிலத்தில் சொத்துக்கள் மீதான 6% வரி உயர்வை திரும்பப் பெற கோரியும் வணிக உரிமக் கட்டண உயர்வு தொழில் வரி உயர்வு போன்றவற்றை திரும்பப் பெற கோரியும் ஒன்றிய அரசு அண்மையில் அறிவித்துள்ள கட்டிடங்கள் மீதான வாடகையின் மீது 18% சேவை வரி அனைத்து தரப்பு வணிகர்களையும் குறிப்பாக இணக்க வரி செலுத்தும் வணிகர்கள் கூட கட்ட வேண்டும் என்கிற அறிவிப்பை எதிர்த்தும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேரமைப்போடு ஒருங்கிணைப்புச் சங்கங்களான தமிழ்நாடு ஹோட்டல் வியாபாரிகள் சங்கம், தமிழ்நாடு பர்னீச்சர் சங்கம், தமிழகம் தழுவிய சேம்பர் ஆப் காமர்ஸ், தமிழ்நாடு நகை வியாபாரிகள் சங்கம், தமிழ்நாடு பேக்கரி வியாபாரிகள் சங்கம், தமிழ்நாடு டீக்கடை வியாபாரிகள் சங்கம், தமிழ்நாடு டிஜிட்டல் சங்கங்கள் அனைத்தும் ஒத்துழைப்பும் மற்றும் ஆதரவும் தருவதாக தெரிவித்திருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post வணிகர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காண கோரி தமிழக அளவில் டிச.11ல் கண்டன ஆர்ப்பாட்டம்: ஏ.எம்.விக்கிரமராஜா அறிவிப்பு appeared first on Dinakaran.