×
Saravana Stores

எது பண்ணுனாலும் பிளான் பண்ணி பண்ணணும்!

நன்றி குங்குமம் தோழி

‘‘ஒரு காரை வாங்க முடிவு செய்தாலே ஒன்று அதன் மைலேஜ் பார்த்து வாங்குவோம். இல்லை கலர் மற்றும் டிசைன் பார்த்து வாங்குவோம். இதுமாதிரிதான் இன்டீரியர் டிசைனும். வீட்டின் தேவைக்கு ஏற்ப இன்டீரியர் செய்வோம் அல்லது வசதிக்கு ஏற்ப செய்வோம். இன்னும் சிலர் டிரெண்டிற்கு ஏற்ப தங்களோடு இன்டீரியர் டிசைனை செட் செய்ய நினைப்பார்கள். எதுவாக இருந்தாலும் நம்ம பட்ஜெட்டை பொறுத்தது.

வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தா நம்மைப் பார்க்குறாங்களோ இல்லையோ நம்முடைய வரவேற்பறை, ஷோபாவில் தொடங்கி, டைனிங், கிச்சன், பெட்ரூம், பாத்ரூம் வரை நமது கனவு இல்லத்தை கண்ணாலே நோட்டம் விடுவாங்க. நம்வீட்டின் லுக்கையும், இன்டீரியர் டிசைனையும் நோட் செய்கிற அளவுக்கு இத்துறை உச்சத்தில் இருக்கு’’ என பேசிய சென்னை
இன்டீரியஸ் டிசைன் மார்க்கெட்டிங் டீமை தொடர்பு கொண்டு டிரெண்டில் இருக்கிற சில இன்டீரியர் டிசைன் குறித்து விளக்கம் கேட்டபோது…

மினிமலைஸ்டிக் டிசைன்ஸ்…

தேவையில்லாத பொருளை தள்ளி வச்சுட்டு தேவைப்படுகிற பொருளை பயன்படுத்துவதுதான் மினிமலைஸ்டிக் டிசைன். இன்டீரியரிலும் இதை கொண்டுவந்து மேனோக்ரோமேட்டிக் கலர்ஸ் பயன்படுத்தி சிம்பிள் பர்னிச்சரில் பெர்ஃபெக்டா வீட்டை மாற்றி பயன்படுத்த முடியும். less is always more என்பதே இந்த டிசைனின் பொருள்.

பயோபிலிக் டிசைன்ஸ்…

நீங்க நேச்சர் லவ்வர்ஸ் என்றால் இந்த டிசைன் உங்களுக்கே உங்களுக்கானது. நேச்சரோட நம்மை கனெக்ட் செய்கிற கான்செப்ட்தான் பயோபிலிக் (BIOPHILIC) டிசைன்ஸ். இதில் மணி பிளான்ட்ஸ், ஸ்பைடர் பிளான்ட்ஸ், இந்தியன் பேஸில் மாதிரியான பிளான்ட்ஸ்களை வீட்டுக்குள், பால்கனியில் வைத்து நேச்சுரல் ஆம்பியன்ஸ் லுக்கை கொண்டுவருவது.

என்டர்டெய்மென்ட் போக்கஸ்ட் டிசைன்ஸ்…

இன்றைய இளம் தலைமுறையினர் தங்களை என்டர்டெய்மென்ட் செய்ய வீட்டில் தனி இடம் வேண்டும் என நினைத்தால் மாடர்ன் டெக்னாலஜியில் கேமிங் ரூம்(gaming), பக்காவான மினி தியேட்டர் செட்டப் என வீட்டுக்குள் கொண்டு வரலாம்.

லேயர்ட் லைட்டிங்…

லைட்டிங் மெத்தெட்ஸ்தான் நமது மூடை செட் செய்கிற விஷயம். அதாவது, லைட்டோட பொஷிஷன், லைட்டோட கலர் போன்றவையே லேயர்ட் லைட்டிங் டிசைன்ஸ் (Layered lighting) எனப்படும். இதற்கென சான்டிலியர், பென்டென்ட்ஸ், வால் லைட்ஸ், சீலிங் லைட்ஸ், அவுட்டோர் லைட்ஸ், வேனிட்டி லைட்ஸ், டேபிள் லேம்ப்ஸ், ப்ளோர் லேம்ப்ஸ் என வெரைட்டியா உண்டு.

சைபை ஹோம்ஸ் (SCI-FI homes)

அலெக்ஸா, கூகுள் பில்ட் இன் போன்றவை எலக்ட்ரானிக்ஸ் மார்க்கெட்டில் எக்கச்சக்கம் கிடைக்கிறது. இவற்றை பயன்படுத்தி வீட்டை டிரென்டியாக மாற்றலாம். அதாவது, ஹாலிவுட் லுக்கில் ஹைஃபை ஸ்டைலுக்கு முழுக்க முழுக்க டெக்னாலஜி செய்யப்பட்ட வீடாக மாற்ற முடியும். கூடவே AI டெக்னாலஜியில் கன்ட்ரோல் ஆகிற லைட், ஃபேன்ஸ் அண்ட் ஹோம் அப்ளையன்ஸ், மோஷன் டிடெக்டிவ், சிசிடிவி கேமரா எனவும் பயன்படுத்தி, இருந்த இடத்தில் வீட்டைக் கண்ட்ரோல் செய்யலாம். Safety is always your priority.

ரக்ஸ் டிசைன்ஸ் (RUGS designs)

கார்பெட் என்பது திக்கான பேப்ரிக்கில் தரையோடு தரையாக மொத்த ஃப்ளோரையும் கவர் செய்கிற முறை. ஆனால் ரக்ஸ் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் போடுவதற்கு பயன்படுவது. நல்ல இன்டீரியர் டிசைனுக்கு ஏற்ற தரை விரிப்பை (Rugs) தேர்ந்தெடுத்து விரிப்பது ரொம்பவே முக்கியம். ரக்ஸ் வீட்டிற்கு ரிச்சான லுக் தருகிற விஷயம்.

மல்டி பங்ஷனல் ஸ்பேசஸ்

வீடுதான் பலருக்கும் இப்போது அலுவலகம். வொர்க் ஃப்ரெம் ஹோமில் வேலை செய்பவர் நீங்கள் எனில், உங்கள் வீட்டையும் மல்டி பங்ஷனல் வீடாக மினி ஆபீஸ், மினி ஜிம், மெடிடேஷனல் ரூம், ஸ்டெடி ரூம் என உருவாக்கலாம்.

நேச்சுரல் ஸ்டோன் டிசைன்ஸ்

எத்தனை ஆண்டுகள் ஆனாலும், நிலையான… நீடித்த பிரீமியம் லுக்கினை தரும் இந்த டிசைன்ஸ் மார்பில், லைம்ஸ்டோன், சிலேட்ஸ், கிரானைட்ஸ் மெட்டீரியலில் உருவாகும். வால்ஸ், ப்ளோர், ஷோகேஷ், பர்னிச்சர் என எல்லாவற்றுக்கும் இதனை பயன்படுத்தலாம்.

டெக்ஸ்ஷர்ட் எலிமென்ட்ஸ்

நமது இன்டீரியர் டிசைனை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்கிற, நமது வீட்டுக்கு தனி லுக் தருகிற ஒரு மெத்தெட் டெக்ஸ்ஷர்ட் எலிமென்ட்ஸ். இது குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் பொருட்களின் லுக் அண்ட் ஃபீலை கூடுதலாய் எடுத்துக் காட்டும். இத்துடன் ஷோபா, மிரர்ஸ், ஓவியம்னு அந்த இடத்தை டெக்ஸ்ஷர்ட் எலிமென்ட் (Textured elements) உள்ள
இடமாக மாற்றலாம்.

ஹேண்ட்மேட் அண்ட் ஆர்டிஷன் டிசைன்ஸ்…

பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் மறக்காத எக்கோ ப்ரெண்ட்லி டைப் டிசைன் இது. களிமண்ணால் தயாரான பொருட்கள், பனைமட்டையில் உருவான அழகான கூடைகள், அலங்கார பொம்மைகள் என ஹேண்ட்மேட் மற்றும் ஆர்டிஷன் டிசைன்கள் இதற்கு பயன்படுத்தப்படும். கூடவே நிலைக் கண்ணாடி என்கிற மிரர் வீட்டுக்குத் தேவையான விஷயங்
களில் முக்கியமானது. என்ன குவாலிட்டி, என்ன பிரேம் என்பதெல்லாம் இதில் முக்கியமானது. வீட்டின் அறையின் அழகை லைட் வெளிச்சத்துடன் பிரதிபலிக்கும் நிலைக் கண்ணாடியினை எந்த இடத்தில் நாம் வைக்கப் போகிறோம் என்பதில்தான் கண்ணாடியின் கூடுதல் அழகு வெளிப்படும்.

How to plan for interior…

* நமது வீட்டுக்கான இன்டீரியர் டிசைனை முடிவு செய்வதற்கு முன்பு நம் பட்ஜெட் என்ன, எந்த மாதிரியான தேவை நமக்கு இருக்கின்றது என்பதை இன்டீரியர் டிசைனரோடு அமர்ந்து
பேசுவது இதில் மிக முக்கியம். அப்போதுதான் நம் பட்ஜெட்டில் பெட்டரான டிசைன் என்ன என்பதை நமக்கு அவர்களால் தெரிவிக்க முடியும்.

* பயன்படுத்தப் போகிற பொருட்களின் குவாலிட்டி, குவான்டிட்டி, எவ்வளவு பயன்படுத்தப் போகிறோம் என்பதைப் பொருத்தும், எந்தெந்த மாதிரியான டிசைன் எனவும் முடிவான பிறகே சதுர டிக்கு இவ்வளவு என முடிவாகும். நம் பட்ஜெட்டுக்கு ஏற்ற மாதிரியும், இன்டீரியர் டிசைன் செய்பவர்களின் ஸ்கில்க்கு ஏற்பவும் பட்ஜெட் இதில் மாறுபடும்.

* நம்மிடம் இருக்கும் பர்னிச்சர்களை வைத்தே இன்டீரியர் டிசைன் வேண்டும் என்றால் என்ட்ரி லெவல் போதுமானது. அதேபோல் வீட்டை வாடகைக்கு விடுவதற்கும் என்ட்ரி லெவல் செட்டாகும்.

* பர்னிச்சரில் தொடங்கி எல்லாமே நமக்கு புதிதாக வேண்டும். அதுவும் டீட்டெய்ல்ட் டிசைனாக வேண்டும் என நினைப்பவர்கள் மீடியம் லெவலை தேர்ந்தெடுக்கலாம்.

* லேட்டஸ்ட் டெக்னாலஜி, டீடெய்ல்ட் டிசைன் போன்றவை ஹைலெவல் இன்டீரியர் டிசைனுக்குள் வரும். இந்த டிசைனிங் பட்ஜெட் மட்டும் 28 லட்சத்தில் தொடங்கி நாம் பயன்படுத்துகிற டிசைனை பொருத்து தெரிய வரும்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

The post எது பண்ணுனாலும் பிளான் பண்ணி பண்ணணும்! appeared first on Dinakaran.

Tags : Kunkum Dothi ,
× RELATED கவனமுள்ள பழக்கவழக்கங்கள்!