×
Saravana Stores

ஐபிஎல் ஏலம்: இந்திய வீரர்கள் ஷ்ரேயஸ் ஐயர் 26.75 கோடி; ரிஷப் பந்த்-ஐ ரூ.27 கோடிக்கு ஏலம்

2025 ஐபிஎல் மெகா ஏலம் தொடங்கியது. இன்றும் (நவம்பர் 24), நாளையும் (நவம்பர் 25) இந்த ஏலம் நடைபெற உள்ளது. இரண்டு நாட்களிலும் மதியம் 3.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை ஏலம் நடக்கவுள்ளது. மொத்தமாக 577 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்றுள்ளனர். ரிஷப் பண்ட், கே எல் ராகுல் போன்ற முன்னணி இந்திய வீரர்கள் ஏலத்தில் பங்கேற்று உள்ளனர்.

ரூ.4 கோடிக்கு சென்னை அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் ரச்சின் ரவீந்தரா!

ரூ.8 கோடிக்கு ஹைதராபாத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் ஹர்ஷல் படேல்!

ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர்-ஐ எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை

ரூ.3.40 கோடிக்கு சென்னை அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் ராகுல் திரிபாதி!

ரூ.6.25 கோடிக்கு சென்னை அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் டெவோன் கான்வே!

இந்திய வீரர் தேவ்தட் படிக்கல்-ஐ எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை

ரூ.6.25 கோடிக்கு டெல்லி அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் ஹாரி புரூக்!

ரூ.14 கோடிக்கு டெல்லி அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் கேஎல் ராகுல்!!

லியாம் லிவிங்ஸ்டோன் பெங்களூரு அணியால் ரூ.8.75 கோடிக்கு வாங்கப்பட்டார்

ரூ.12.5 கோடிக்கு குஜராத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் முகமது சிராஜ்!

யுஸ்வேந்திர சாஹல் பஞ்சாப் அணியால் ரூ.18 கோடிக்கு வாங்கப்பட்டார்

ரூ.7.5 கோடிக்கு லக்னோ அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர்

முகமது ஷமி ஐதராபாத் அணியால் ரூ.10 கோடிக்கு வாங்கப்பட்டார்

ரிஷப் பந்த் லக்னோ அணியால் ரூ.27 கோடிக்கு வாங்கப்பட்டார்

மிட்செல் ஸ்டார்க்கை டெல்லி அணி ரூ.11.75 கோடிக்கு ஏலம் எடுத்தது

ஜாஸ் பட்லரை 15 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது குஜராத்

ஷ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் அணியால் ரூ.26.75 கோடிக்கு வாங்கப்பட்டார்

26 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போய், அதிக விலைக்கு ஏலம் சென்ற வீரர் என்ற சாதனையை படைத்தார் ஸ்ரேயாஸ் ஐயர்

ரூ.10.75 கோடிக்கு தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா குஜராத் அணியால் வாங்கப்பட்டுள்ளார்

ஆர்ஸ்தீப் சிங்கை 18 கோடி ரூபாய்க்கு RTM கார்டு மூலம் பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது

The post ஐபிஎல் ஏலம்: இந்திய வீரர்கள் ஷ்ரேயஸ் ஐயர் 26.75 கோடி; ரிஷப் பந்த்-ஐ ரூ.27 கோடிக்கு ஏலம் appeared first on Dinakaran.

Tags : IPL ,Shreyas Iyer ,Rishab Band ,Auction ,Dinakaran ,
× RELATED 18ஆவது ஐபிஎல் தொடர் அடுத்தாண்டு மார்ச்...