×
Saravana Stores

கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கான ஊரக திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம்

சேலம்: தமிழக கிராமப்புற மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் ஊரக திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களின் நலனுக்காக, ஊரக திறனாய்வு திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், ஊரக பகுதிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. இதன்மூலம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 50 மாணவர்கள், 50 மாணவிகள் என மொத்தம் 100 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஆண்டுதோறும் ரூ.1,000 வீதம், மொத்தம் ரூ.4,000 படிப்புதவித்தொகையாக வழங்கப்படும்.

அதன்படி நடப்பு 2024-2025ம் கல்வியாண்டிற்கான ஊரக திறனாய்வு தேர்வு, அடுத்த மாதம் 14ம் தேதி (சனிக்கிழமை) நடத்தப்படுகிறது. இதனையடுத்து அந்தந்த பள்ளிகள் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை,அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளம் மூலம் பள்ளித் தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், வருவாய் சான்றினையும் இணைத்து, கடந்த 22ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனிடையே தற்போது கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்களின் விண்ணப்பங்களை, நாளை (25ம் தேதி) வரை பதிவேற்றம் செய்யலாம் என, அரசுத்தேர்வுகள் இணை இயக்குநர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

The post கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கான ஊரக திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு அரசுக்கு வானிலை ஆய்வு மையம் கடிதம்!!