பெங்களூரு: ஹாசன் மாவட்டத்தில் முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினரை பலாத்காரம் செய்த வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். பிரஜ்வல் ரேவண்ணா மற்ற 3 வழக்குகளில் கேட்டிருந்த ஜாமீன் மனுக்களை கடந்த அக்டோபர் 21ம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது 4வது வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பிரஜ்வலின் முன் ஜாமீன் மனுவை வாபஸ் பெறுவதாக வழக்கறிஞர் கூறினார். ஆனால் நீதிபதி நாகபிரசன்னா, முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
The post 4வது பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.