×
Saravana Stores

காற்று மாசு உத்தரவை பின்பற்றாத டெல்லி அரசு, காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

புதுடெல்லி: டெல்லியில் நிலவும் கடும் காற்று மாசுபாடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி அபயா எஸ் ஓஹா தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. கடந்த விசாரணையின் போது தலைநகர் டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு நிலவுவதாகவும் அதனால் இதற்காக டெல்லிக்குள் கனரக வாகனங்களை அனுமதிப்பதை தடுப்பது மற்றும் அரசு சார்ந்த கட்டுமானங்களுக்கு நிறுத்தி வைப்பது போன்ற நான்காம் கட்ட நடவடிக்கைகளை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

மேற்கண்ட வழக்கு நேற்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ் ஓஹா மற்ரும் அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில்,‘‘ உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி கனரக வாகனங்கள் டெல்லிக்குள் அனுமதிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றது. இதில் எங்களது உத்தரவை சரியாக பின்பற்ற தவறிய டெல்லி அரசு மற்றும் டெல்லி காவல்துறை ஆகியவற்றிற்கு எங்களது கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் குறிப்பிடப்பட்ட 13 நுழைவு பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை உச்ச நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.மேலும் இதனை கண்காணிக்க 13 வழக்கறிஞர்களை இதற்காக நியமிக்கிறோம். அவர்கள் நேரில் ஆய்வு செய்வார்கள் என்று உத்தரவிட்டனர்.

The post காற்று மாசு உத்தரவை பின்பற்றாத டெல்லி அரசு, காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi government ,New Delhi ,Delhi ,Justice ,Abaya S Oha ,Dinakaran ,
× RELATED பிணைத் தொகை இல்லாததால் ஜாமீன் பெற...