- ஐ.எஸ்.எல் கால்பந்து
- பஞ்சாப்
- நார்த் ஈஸ்ட் யுனைடெட்
- புது தில்லி
- லெபனான்
- வியட்நாம்
- ISL பொருந்தி
- தின மலர்
புதுடெல்லி: ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 11வது தொடர் செப். 13ம் தேதி தொடங்கியது. இடையில், இந்திய அணி, லெபனான், வியட்நாம் அணிகளுடன் சர்வதேச ஆட்டங்களில் அப்போது விளையாட இருந்ததால், அக்.6 முதல் 16 வரை ஐஎஸ்எல் போட்டியின் லீக் ஆட்டங்கள் இடை நிறுத்தம் செய்யப்பட்டன. லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால் அந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. வியட்நாம் உடனான ஆட்டம் மட்டும் நடந்தது. இந்நிலையில் இந்தியா – மலேசியா இடையே நவ.18ம் தேதி நடைபெற்ற ஆட்டத்துக்காக மீண்டும் ஐஎஸ்எல் போட்டி இடை நிறுத்தம் செய்யப்பட்டது.
அதன்படி நவ.11 முதல் நவ.22ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐஎஸ்எல் தொடர், இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது. தொடர்ந்து, 2025, மார்ச் 12ம் தேதி வரை லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதன் பிறகு அரையிறுதி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும் அணிகளைப் பொறுத்து அரையிறுதி ஆட்டங்களுக்கான அட்டவணை வெளியாகும். டெல்லி ஜவகர்லால் ஸ்டேடியத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கும் முதல் ஆட்டத்தில் பஞ்சாப் – நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகின்றன.
The post ஐஎஸ்எல் கால்பந்து போட்டிகள் இன்று முதல் மீண்டும் துவக்கம்: பஞ்சாப் – நார்த்ஈஸ்ட் யுனைடெட் மோதல் appeared first on Dinakaran.