- –
- கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட்
- இந்தியா
- ஆஸ்திரேலிய வீரர்களான
- Bumrah
- பெர்த்
- கிரிக்கெட் அணி
- ஆஸி…
- கவாஸ்கர் தொடர் முதல்
- தின மலர்
பெர்த்: ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளான நேற்று முதல் இன்னிங்சில் இந்தியா 150 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் ஆடிய ஆஸி அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 67 ரன் மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது. ஆஸி சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கான 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. பெர்த் நகரில் நேற்று துவங்கிய முதல் டெஸ்டின் முதல் நாளான நேற்று, டாஸ் வென்ற ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். பின் ஜோடி சேர்ந்த தேவ்தத் படிக்கல்லும், பூஜ்யத்தில் கவிழ்ந்தார். 3வது விக்கெட்டுக்கு உள் நுழைந்த நட்சத்திர வீரர் விராட் கோலியும் நம்பிக்கை அளிக்காமல் 5ல் விக்கெட் பறிகொடுத்தார். தொடர்ந்து இந்திய வீரர்கள் மிக மோசமாக ஆடியதால், 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 150 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.
மற்றொரு துவக்க வீரர் கே.எல்.ராகுல் 26, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 37, நிதிஷ் குமார் ரெட்டி 41 ரன் எடுத்து ஓரளவு கவுரவம் காத்தனர். ஆஸி பந்து வீச்சாளர்கள் ஜோஷ் ஹேசல்வுட் 29 ரன்னுக்கு 4 விக்கெட், மிச்செல் ஸ்டார்க் 14 ரன்னுக்கு 2 விக்கெட், பேட் கம்மின்ஸ் 67 ரன்னுக்கு 2 விக்கெட், மிச்செல் மார்ஷ் 12 ரன்னுக்கு 2 விக்கெட் வீழ்த்தினர். அதன் பின் முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸி வீரர்களும் பரிதாப ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேப்டன் பும்ரா மந்திரப் பந்துகளை வீசி அனாயசமாக 4 விக்கெட்டுகளை பறித்து, ஆஸி அணியை கதிகலங்கச் செய்தார். முகம்மது சிராஜ் 2 விக்கெட்டுகளும், ஹர்ஷித் ராணா, 1 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நேர முடிவில் ஆஸி அணி, 7 விக்கெட்டுகளை இழந்து, 67 ரன் மட்டுமே எடுத்து தத்தளித்தது. அலெக்ஸ் கேரி 19, மிச்செல் ஸ்டார்க் 6 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இந்தியாவை விட 83 ரன்கள் பின்தங்கி உள்ள ஆஸி இன்று ஆட்டத்தை தொடர்கிறது. முதல் இன்னிங்சில், இந்திய பந்து வீச்சாளர்களின் நேர்த்தியான பவுலிங்கை எதிர்கொண்டு, இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை கடப்பார்களா என்ற கேள்விக்கு இன்று விடை தெரியும்.
The post பார்டர் – கவாஸ்கர் தொடர் முதல் டெஸ்ட்; 150 ரன்னில் சுருண்ட இந்தியா 67க்கு 7 இழந்து ஆஸி.யும் பரிதாபம்: மந்திரப் பந்து வீசி பும்ரா மிரட்டல் appeared first on Dinakaran.