×
Saravana Stores

குன்னூரில் பெல்ஜியம் சுற்றுலா பயணிகள் கார் பேரணி


குன்னூர்: குன்னூரில் பெல்ஜியம் சுற்றுலா பயணிகளின் பழமை வாய்ந்த கார் பேரணி நேற்று நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் முதல் சீசனும், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 2வது சீசனும் நடைபெறுவது வழக்கம். சீசன் காலங்களில் நீலகிரிக்கு தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரையும், அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்யும். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மழை காலங்களில் குளிரான காலநிலை அனுபவிக்கவும், மேகமூட்டங்களை கண்டு ரசிக்கவும் வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று பெல்ஜியம் நாட்டை சார்ந்த 45 சுற்றுலா பயணிகள், 22 பழமை வாய்ந்த கார்களில் பேரணியாக குன்னூர் வந்தனர். கடந்த 14ம் தேதி கோவாவில் தொடங்கி இந்த பேரணி மைசூர், கூடலூர் வழியாக குன்னூரை வந்தடைந்தது. இவர்கள் குன்னூரில் பல்வேறு இடங்களுக்கு கார்களில் பேரணியாக சென்றனர். இந்த பேரணி தங்களுக்கு மகிழ்ச்சி அளித்ததாகவும், தொடர்ந்து மேட்டுப்பாளையம், ஈரோடு, தஞ்சாவூர் வழியாக சென்னை செல்ல உள்ளதாகவும் தெரிவித்தனர்.

The post குன்னூரில் பெல்ஜியம் சுற்றுலா பயணிகள் கார் பேரணி appeared first on Dinakaran.

Tags : Gunnar ,Nilgiri district ,Neelgiri ,car rally in Gunnar ,Dinakaran ,
× RELATED கட்டுப்பாட்டை காற்றில் பறக்கவிட்ட...