ஊட்டி : காலநிலை மாற்றத்தை மீட்டு எடுத்தல் திட்டத்தின் கீழ் கோத்தகிரி விஷ்வ சாந்தி பள்ளியில் மாணவர்களால் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முன்னெடுத்துள்ள காலநிலை மாற்றத்தை மீட்டு எடுத்தல் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் தற்போது மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி பகுதியில் உள்ள விஷ்வ சாந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் சிவக்குமார் தலைமை வகித்தனர்.
இதைத்தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்தில் 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்தனர். தொடர்ந்து, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் கே.ஜே.ராஜு பேசுகையில், ‘‘இந்த பூமியை காக்க நமக்கு இருக்கும் கடைசி நம்பிக்கையான மாணவச் செல்வங்கள் தான் இந்த பூமியை காப்பாற்ற முடியும். எனவே, மாணவர்கள் இயற்கையை பாதுகாக்க முன் வர வேண்டும். தங்கள் வாழ்நாளில் பல்வேறு பகுதிகளிலும் மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும்’’ என்றார். இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post கோத்தகிரியில் காலநிலை மாற்றத்தை மீட்டு எடுத்தல் திட்டத்தில் 200 மரக்கன்றுகள் நடவு appeared first on Dinakaran.