- தமிழ்நாடு அரசு
- ரெட்டியர்சத்ரா
- அமைச்சர் முதலாம் பெரியசாமி
- கிராமிய அபிவிருத்தி அமைச்சர்
- ஐ. பெரியாசாமி பொன்னிமந்துரை
- அனுமந்தரயங்கோட்
- மயிலாப்பூர்
- குட்டாதுபதி
- கரீசல்பட்டி
- கசவனம்பட்டி
* ரெட்டியார்சத்திரத்தில் நடந்த விழாவில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு
ரெட்டியார்சத்திரம் : ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பொன்னிமாந்துரை, அனுமந்தராயன்கோட்டை, மைலாப்பூர், குட்டத்துப்பட்டி, கரிசல்பட்டி, கசவனம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தும், அலவாச்சிபட்டியில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டிலான புதிய திட்ட பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் அமைச்சர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். திண்டுக்கல் மாவட்டத்திலும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொன்னிமாந்துரை, அனுமந்தராயன்கோட்டை, மைலாப்பூர், குட்டத்துப்பட்டி, கரிசல்பட்டி மற்றும் கசவனம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளன.
அலவாச்சிபட்டியில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டிலான புதிய திட்ட பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பொன்னிமாந்துரை ஊராட்சியை பொறுத்தவரை ரூ.9 கோடி அளவிற்கு வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுபோல் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடிநீர் மற்றும் விவசாயிகளுக்கான பிரச்னைகளை தீர்ப்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது.
ஊராட்சி என்று எடுத்து கொண்டால் அதில் பல உட்கடை கிராமங்கள் உள்ளன. அனைத்து பகுதி கிராம மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்திட வேண்டும். அதற்காக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை நாட்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மாற்றி அமைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தில் உள்ள வழிமுறைகளை ஆய்வு செய்து அதிலுள்ள பிரச்னைகளை ஆராய்ந்து எளிமைப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடவு செய்வது அதற்கு தண்ணீர் ஊற்றுவது, சாலைகள் சீரமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதுபோன்ற பணிகளை மேற்கொள்ளவது தொடர்பாக ஒன்றிய அரசிடம் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் அந்த பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த செயல்பாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் உறுதியாக உள்ளார். ஜிஎஸ்டி போன்ற வரி பணத்திலிருந்து வரிபகிர்வு கோரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் தொடர்பாக ஆதாரத்துடன் ஒன்றிய நிதித்துறை ஆணையத்திற்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. ஊராட்சிகளுக்கு வரி உயர்வு செய்யப்படவில்லை.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் தமிழ்நாட்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டும் ஒரு லட்சம் வீடுகளுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் துவங்கிடும் போது 1.16 கோடி மகளிருக்கு வழங்கப்பட்டது. பின்னர் விடுபட்ட தகுதியான நபர்களுக்கும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தற்போது 1.18 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர். தொடர்ந்து தகுதியுள்ள அனைவரும் இத்திட்டத்தின் கீழ் பயனடைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கட்சி, மதம், ஜாதி என எவ்வித பாகுபாடும் என்றி அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வாழ்க்கை தேவைகள் அனைத்தும் மக்களை சென்றடைய செய்வதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் பொதுமக்களுக்கான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சிவகுருசாமி, துணை தலைவர் ராஜேஸ்வரி தமிழ்செல்வன், திமுக கிழக்கு மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல், தெற்கு ஒன்றிய செயலாளர் மணி, ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மலரவன், வடிவேல் முருகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஷ் பெருமாள், மாவட்ட சுற்றுச்சூழல் அணி மலைச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் நிர்மலா இன்பராஜ், வேல்கனி ஹரிச்சந்திரன், பால்ராஜ், சக்தி, வெள்ளதாய் தங்கப்பாண்டி மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
The post விவசாயிகளின் பிரச்னைகளை தீர்ப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது appeared first on Dinakaran.