கோத்தகிரி : கோத்தகிரியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கோத்தகிரி வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பரிசோதித்தார்.
தமிழ்நாடு அரசின் அனைத்து நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் தங்குதடையின்றி மக்களுக்கு விரைந்து சென்றடைவதை உறுதிசெய்ய உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தை முதலமைச்சர் அறிவித்து மாதம் தோறும் மாவட்டத்தில் ஒரு வட்டத்தில் தங்கி கள ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். அப்போது, பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிய அறிவுறுத்தியுள்ளார். அதனடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்களால் பல்வேறு பகுதிகளில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் கோத்தகிரி வட்டத்தில் தங்கி பல்வேறு அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தி வரும் திட்டங்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டனர்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் கேர்பெட்டா பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் சார் ஆட்சியர் சங்கீதா, கோத்தகிரி வட்டாட்சியர் கோமதி, உதவி திட்ட அலுவலர் சாந்த சீலன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், விஜயா உட்பட பலர் இருந்தனர்.
The post உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.