கொச்சி: கேரளாவில் நேற்றிரவு ஸ்கூட்டரை அடித்து நொறுக்கி 3.5 கிலோ தங்கம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மலப்புரம் மாவட்டம் பெருங்கல் மன்னாரில் நேற்று இரவு 11 மணிக்கு நகைக்கடையை அடைத்து சகோதரர்கள் ஷாநவாஸ், யூசுப் ஸ்கூட்டரில் வீடு திரும்பினர். அப்போது வேகமாக வந்த மகேந்திரா வேன் ஸ்கூட்டரை அடித்து நொறுக்கி அவர்களிடம் இருந்த 3.5 கிராம் தங்கத்தை திருடி சென்றனர். படுகாயமடைந்த சகோதரர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் முகமுடி அணிந்து திருடிய கும்பல் திருச்சூரில் போலீசார் வாகன சோதனையில் சிக்கினர் இதில் சதிஷ், நிக்கிலன், ராஜன், லிஜியன் ஆகியோர் பிடிபட்டனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் திருடப்பட்ட கும்பலுடன் மேலும் 5 பேருக்கு தொடர்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால் கொள்ளை யடிக்கப்பட்டவர்களிடம் தங்கம் கிடைக்கவில்லை. கைது செய்யப்பட்ட 4 பேரையும் மலப்புரம் போலீசாரிடம் ஒப்படைக்க திருச்சூர் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
The post கேரளாவில் ஸ்கூட்டரை அடித்து நொறுக்கி 3.5 கிலோ தங்கம் கொள்ளை: 4 பேர் கைது appeared first on Dinakaran.