×
Saravana Stores

ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான வழக்கு: ‘அபிடவிட்’ தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: தேர்தலின் போது சொத்து விவரங்களை தவறாக தாக்கல் செய்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக விண்ணப்பத்தோடு இணைத்து அபிடவிட் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. சட்டப் பேரவை தேர்தலின் போது ஓ.பன்னீர்செல்வம் தனது சொத்து விவரங்களை தவறாக தாக்கல் செய்ததாக பி.மிலானி என்பவர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரணை நடத்திய நீதிமன்றம், ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் அதனை விசாரித்த உயர்நீதிமன்றம், ஓ.பன்னீர் செல்வம் மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்தது. மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பி.மிலானி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எ.வேலன், ‘இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் சட்ட விதிமுறைகளை கருத்தில் கொள்ளாமல் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆரை ரத்து செய்துள்ளது. எனவே உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் நீங்கள் (மனுதாரர்) மாவட்ட நீதிமன்றத்தில் விண்ணப்பத்தை தாக்கல் செய்தபோது, அதோடு அபிடவிட் (வாக்கு மூலங்கள்) தாக்கல் செய்யவில்லை. எனவே தற்போது உங்களது விண்ணப்பத்தோடு அனைத்து விவரங்களும் அடங்கிய அபிடவிட்டை இணைத்து மீண்டும் தாக்கல் செய்யுங்கள். அதன் அடிப்படையில் விசாரணை நீதிமன்றம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்’ என்று தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.

The post ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான வழக்கு: ‘அபிடவிட்’ தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி appeared first on Dinakaran.

Tags : O. Panneerselvam ,Supreme Court ,New Delhi ,Legislative Assembly ,Dinakaran ,
× RELATED டீசல் மீது கூடுதல் வரி விதிக்கும் முயற்சியை கைவிட ஓபிஎஸ் கோரிக்கை