×
Saravana Stores

கோயில் வாசல் பகுதியில் டூவீலர்கள் நிறுத்துவதால் பக்தர்கள் அவதி

தொண்டி, நவ.22: தொண்டி உந்தி பூத்த பெருமாள் கோயில் வரலாற்று சிறப்புமிக்க மிகவும் பழமையான கோயிலாகும். இங்குள்ள பெருமாள் மற்றும் தேவியர் சிலைகள் சுமார் 8 அடி உயரம் உள்ளது. சுற்று வட்டாரத்தில் இங்கு மட்டுமே பெரிய சிலைகள் உள்ளது.பக்தர்களின் வருகை தினமும் அதிகம் இருக்கும். புரட்டாசி மாதத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பிரசித்தி பெற்ற இக்கோயிலின் முன்பு டூவீலர் மற்றும் வாகனங்களை நிறுத்தி செல்வதால் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் வழியில்லாமல் சிரமம் அடைகின்றனர்.

அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து பக்தர்கள் கூறியது, தற்போது கார்த்திகை மாதம் என்பதால் அதிகாலை முதல் பக்தர்கள் அதிகம் வருகின்றனர். அருகில் உள்ள மார்க்கெட்டிற்கு வரும் நபர்கள் கோயிலின் முன்பு வாகனங்களை நிறுத்தி செல்வதால் கடும் சிரமம் ஏற்படுகிறது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post கோயில் வாசல் பகுதியில் டூவீலர்கள் நிறுத்துவதால் பக்தர்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Thondi ,Dondi Pumpa Perumal Temple ,Perumal ,Devir ,
× RELATED வெடிமருந்து பறிமுதலில் ஒருவர் கைது