×
Saravana Stores

இறக்கை எலும்பு உடைந்து சாலையில் கிடந்த ஆந்தை அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள்

 

மதுரை, நவ. 22: மதுரை, விஸ்வநாதபுரம் திருவள்ளுவர் காலனி பகுதியில் ஆந்தை ஒன்று இறக்கையில் அடிபட்ட நிலையில் சாலையோரத்தில் கிடந்தது. இதுகுறித்து அப்பகுதியினர் வனத்துறைக்கு அளித்த தகவலின் பேரில், காயம்பட்டு கிடந்த ஆந்தையை அவர்கள் மீட்டு தல்லாகுளம் பகுதியில் உள்ள கால்நடை பன்முக மருத்துவமனையில் அனுமதித்தனர். காயமடைந்த நிலையில் இருந்த ஆந்தையை டாக்டர்கள் எக்ஸ்ரே எடுத்து பரிசோதித்தபோது, இறக்கையில் உள்ள எலும்பு உடைந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அரசு கால்நடை மருத்துவ முதன்மை டாக்டர் சரவணன் தலைமையில் டாக்டர்கள் மெரில்ராஜ், கலைவாணன், முத்துராம் கொண்ட குழுவினர் ‘எபாக்சி பட்டி’ என்ற முறையில் ஒட்டுப்பசை மூலம் உடைந்த பகுதியை இணைக்கும் முறையில் 2 மணி நேரம் போராடி ஆந்தைக்கு அறுவை சிகிச்சை நடத்தினர்.

ஆந்தைக்கு மயக்கமருந்து அளித்து, ‘கே வயர்’ எனும் கருவி பொருத்தி இந்த எலும்பு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு ஆந்தை சுய நினைவுக்கு வந்த நிலையில், டாக்டர்கள் அதனை மீண்டும் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மதுரையில் சாலையில் அடிபட்டு கிடந்த ஆந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து 2 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

The post இறக்கை எலும்பு உடைந்து சாலையில் கிடந்த ஆந்தை அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Thiruvalluvar Colony, Viswanathapuram, Madurai ,Dallakulam ,
× RELATED சின்ன உடைப்பு கிராம மக்களை வெளியேற்ற...