×
Saravana Stores

அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான பேச்சு கேரள அமைச்சருக்கு எதிரான வழக்கில் மீண்டும் விசாரணை: உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: கேரள மீன்வளம் மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் சஜி செரியன். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பத்தனம்திட்டா மாவட்டம் மல்லப்பள்ளியில் நடந்த மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசுகையில், நம் நாட்டு மக்களை கொள்ளையடிப்பதற்காகவே அரசியல் சாசன சட்டம் உள்ளது. அதனால் யாருக்கும் எந்தப் பயனும் கிடையாது என்றார்.

சஜி செரியனின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மல்லப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து சஜி செரியான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், அமைச்சர் சஜி செரியன் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசவில்லை என்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

இதனால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட சஜி செரியானுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்தநிலையில் அமைச்சர் சஜி செரியனை வழக்கிலிருந்து விடுவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரியும் நோயல் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி பெச்சு குரியன் தாமஸ், வழக்கை போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை என்றும், சஜி செரியனின் பேச்சை பரிசோதித்ததில் அவர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு உண்மையாக இருக்க வாய்ப்பிருப்பதால் போலீசார் இந்த வழக்கில் தொடர் விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

The post அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான பேச்சு கேரள அமைச்சருக்கு எதிரான வழக்கில் மீண்டும் விசாரணை: உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Kerala Fisheries ,Minister ,Saji Cherian ,Mallapally ,Pathanamthitta district ,
× RELATED பெண் போலீசை பலாத்காரம் செய்த எஸ்ஐ கைது