×
Saravana Stores

கோவா கதீட்ரல் தேவாலயத்தில் புனித சவேரியாரின் உடல் காட்சிப்படுத்தப்பட்டது: ஜன.5 வரை பார்க்கலாம்

பனாஜி: இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தை பரப்பிய புதிய பிரான்சிஸ் சவேரியார் 1552 டிசம்பர் 3ம் தேதி சீனாவில் உள்ள சாங்சோங் தீவில் மறைந்தார். 1553 டிசம்பரில் இந்தியா கொண்டுவரப்பட்ட புனித சவேரியாரின் அழியாத உடல் கோவாவில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படுவது வழக்கம். தற்போது புனித சவேரியாரின் உடல் மற்றும் அவரது புனித நினைவுச்சின்னங்கள் பொதுமக்கள் பார்வைக்காக நேற்று முதல் காட்சிப்படுத்தப்பட்டது.

ஜனவரி 5ம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். இந்த விழா நேற்று காலை கோவாவில் தொடங்கியது. பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மின்சார வாகனத்தில் குழந்தை யேசு பேராலயத்தில் இருந்து புனித கதீட்ரல் வரை புனித சவேரியாரின் நினைவுச்சின்னங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டபோது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழைய கோவாவில் திரண்டனர்.

இந்த விழாவில் ஒரு கர்தினால், நான்கு பேராயர்கள், ஆயர்கள் மற்றும் 400-500 பாதிரியார்கள் கலந்துகொண்டனர். புனித சவேரியாரின் உடல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள புனித கதீட்ரலில் ஜனவரி 4ம் தேதி வரை தினமும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் என்று ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை ஹென்ரி பால்கோ தெரிவித்தார். 80 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கோவா வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

The post கோவா கதீட்ரல் தேவாலயத்தில் புனித சவேரியாரின் உடல் காட்சிப்படுத்தப்பட்டது: ஜன.5 வரை பார்க்கலாம் appeared first on Dinakaran.

Tags : Saint ,Cathedral Church of Goa ,Panaji ,Francis Xavier ,Christianity ,India ,Changsong ,China ,Saint Saviar ,Goa ,Goa Cathedral Church ,
× RELATED மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டி