×
Saravana Stores

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சாலைப்பணிகள் குறித்து அறிக்கை வெளியிட்ட அமைச்சர் ஏ.வ.வேலு

சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சாலைப்பணிகள் குறித்து அமைச்சர் ஏ.வ.வேலு வெளியிட்ட அறிக்கை;

➢ நாகர்கோவில் நெடுஞ்சாலைத் துறை கோட்டத்தின் கீழ் மொத்தம் 1343 கி.மீ நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

➢ கடந்த மூன்று ஆண்டுகளில் 237 கி.மீ நீளமுள்ள 177 சாலைப்பணிகள் ரூ.226 கோடி மதிப்பீட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டு 163 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள 14 பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் 6 பாலப்பணிகள் ரூ.11 கோடி மதிப்பீட்டில் எடுக்கப்பட்டு 3 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. 3 பாலப்பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

➢ நடப்பு நிதியாண்டில் 19 கி.மீ நீளமுள்ள 7 சாலைப்பணிகள் ரூ. 9 கோடி மதிப்பீட்டில் மற்றும் 4 சிறுபாலங்கள் ரூ.2 கோடி மதிப்பீட்டிலும் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் துவங்கப்படவுள்ளன.

➢ சேலம் – கொச்சின் –கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் 12 கி.மீ (பழுதடைந்த பகுதிகளில்) நீளத்திற்கு ரூ.15 கோடி மதிப்பீட்டில் சாலை பணிகள் நடைபெறவுள்ளன.

➢ முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் நிறுவப்பட்டு தற்போது வெள்ளி விழா காண இருக்கும் அய்யன் திருவள்ளுவர் சிலையும், விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் கடல்சார் நடைபாதை பாலப்பணிகள் ரூ. 37 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பாலத்தின் நீளம் 77 மீட்டர் மற்றும் அகலம் 10 மீட்டர் கொண்ட Bowstring Arch Bridge (பவ்ஸ்ட்ரிங் ஆர்ச் பாலம்) ஆகும்.

➢ இது நவீன தொழில் நுட்பத்தில் கடல் அரிப்பு, கடல் காற்றின் வேகம் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது. தற்போது விவேகானந்தர் பாறையினை கண்டுகளிக்கும் சுற்றுலா பயணிகள் மீண்டும் படகு மூலம் அய்யன் திருவள்ளுவர் சிலையினை காண செல்வதால் அதிக நேரம் விரயமாகின்றது.

➢ இந்நடைபாலம் அமைக்கப் படுவதால் சுற்றுலா பயணிகள் எளிதாக அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு செல்லலாம். இப்பாலத்தில் 2.5 மீட்டர் அகலமுடைய கண்ணாடி அடித்தளம் கொண்ட நடைபாதை அமைக்கப்படவுள்ளது. இதனால் கடலின் அழகினை சுற்றுலா பயணிகள் நடந்தவாறே கண்டு ரசித்து மகிழலாம். மேலும் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மற்றும் மாவட்டத்தின் வருவாய் வளர்ச்சியும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

The post கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சாலைப்பணிகள் குறித்து அறிக்கை வெளியிட்ட அமைச்சர் ஏ.வ.வேலு appeared first on Dinakaran.

Tags : Minister ,A. V. Velu ,Kanyakumari district ,CHENNAI ,A.V. Velu ,Nagercoil Highway Department ,A.V.Velu ,Kanyakumari ,Dinakaran ,
× RELATED மோசமான வானிலை : விமானம் அவசர தரையிறக்கம்