×
Saravana Stores

மாமல்லபுரத்தில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை கடலில் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு

மாமல்லபுரம், நவ. 21: மாமல்லபுரத்தில் கடலோர பாதுகாப்பு ஒத்திகையில், கடலில ரோந்து சென்று போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், இசிஆர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் வாகன தணிக்கையிலும் ஈடுபட்டனர். மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையிலிருந்து கடந்த 2008ம் ஆண்டு கடல் வழியாக நுழைந்த தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து, நாடு முழுவதும் கடலோர பாதுகாப்புக்கு முக்கியதுவம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, கடல்வழி மற்றும் கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக, அனைத்து பாதுகாப்பு துறைகளையும் ஒன்றிணைத்து அடிக்கடி கண்காணிப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நேற்று காலை மாமல்லபுரத்தில், ‘சீ விஜில்’ கடலோர பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த 2 நாள் ஒத்திகை பயிற்சி தொடங்கியது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில், கடலோர காவல் படை போலீஸ் எஸ்ஐ ராஜேந்திரன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட கடலோர போலீசார் படகு மூலம் கடலில் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, கடலில் மீன் பிடித்து விட்டு கரைக்கு வந்த படகுகளை போலீசார் தீவிரமாக சோதனையிட்டனர். இதனையடுத்து, மாமல்லபுரம் இசிஆர் நுழைவு வாயில், பூஞ்சேரி 4 முனை சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில், மாமல்லபுரம் டிஎஸ்பி ரவி ஆபிராம் மேற்பார்வையில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில், சட்டம் ஒழுங்கு போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில், சந்தேகத்திற்கிடமான நபர்களோ அல்லது வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் ஏதும் பிடிபடவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

திருக்கழுக்குன்றம்: இந்திய கடற்படையின் சார்பில், ‘சீ விஜில் 24’ எனும் கடலோர கண்காணிப்பு ஒத்திகை 2 நாள் பாதுகாப்பு பயிற்சி நேற்று தொடங்கியது, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் இந்தியாவின் 11,098 கிமீ கடலோர பகுதிகளில் இப்பயிற்சி துவங்கி நடக்கிறது. கடல் வழியாக வரும் ஆபத்துகளை எதிர்கொள்வதற்கான இந்த விழிப்புணர்வு பாதுகாப்பு ஒத்திகையில் தேசிய பாதுகாப்பு குழும செயலக அதிகாரிகள், கடலோர காவல் படை, சுங்கத்துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட 6 மத்திய அமைச்சகங்கள், 21 அமைப்புகள் மற்றும் முகமைகள் பங்கேற்புடன் 2 நாள் பயிற்சி நடத்தப்படுகிறது.

அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தின் முக்கிய கடலோர பாதுகாப்பு பகுதிகளான கோவளம், கல்பாக்கம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் நேற்று காலையில் இருந்தே கடல்வழி மற்றும் சாலைவழி மார்க்கங்களை காவல்துறை மற்றும் கடலோர காவல் படையினர், மீனவர்கள் உதவியுடன் கண்காணித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் உள்ள, இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் சிறப்பு ஒத்திகை பயிற்சி நடத்தப்படுகிறது. இதில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் இப்பயிற்சி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post மாமல்லபுரத்தில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை கடலில் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,ECR Road ,Mumbai ,Maharashtra ,
× RELATED சர்வதேச விளையாட்டு நகரமாக விரைவில்...