×
Saravana Stores

பாலம் கட்டும் பணியின் போது இரும்பு தளவாடங்கள் திருடியவர் கைது

அந்தியூர்,நவ.21: இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி திட்டன்குளம் தெற்கு வீதியைச் சேர்ந்தவர் பாலமுருகன்(36). இவர் அந்தியூரில் இருந்து வெள்ளித்திருப்பூர் செல்லும் ரோட்டில் பெரிய ஏரி கரைப்பகுதியில் பாலம் கட்டும் பணி நடந்துவரும் தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் நேற்று காலை 7 மணி அளவில் பாலம் வேலை நடைபெறும் இடத்திற்கு சென்ற போது, ஒருவர் மொபட்டில் 4 இரும்பு ஷட்டர் மற்றும் 2 இரும்பு பைப்புகளை கட்டிக்கொண்டு புறப்பட்டார். அவரைப் பிடித்து அந்தியூர் போலீசில் பாலமுருகன் ஒப்படைத்தார். விசாரணையில் பாலம் வேலை நடைபெறும் இடத்திலிருந்து இரும்பு தளவாடங்களை திருடியது தர்மபுரி மாவட்டம் பாலக்காடு அம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த தர்(28) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து ஸ்ரீதரை போலீசார் கைது செய்தனர்.

The post பாலம் கட்டும் பணியின் போது இரும்பு தளவாடங்கள் திருடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Andhiyur ,Balamurugan ,Kadladadi Thithankulam South Road, Ramanathapuram district ,Periya lake ,Anthiur ,Vellithirupur ,Dinakaran ,
× RELATED கறம்பக்குடி அருகே கிணற்றுக்குள் விழுந்த கன்றுக்குட்டி உயிருடன் மீட்பு