புதுடெல்லி: இந்தியா , சீனா எல்லைப்பிரச்னையில் புதிய முன்னேற்றம் ஏற்பட்டதால் இருநாடுகளும் கிழக்கு லடாக் எல்லையில் இருந்து படைகளை விலக்கிக்கொண்டன. இதன் அடுத்த கட்டமாக இருநாட்டு பாதுகாப்பு அமைச்சர்களும் லாவோஸ் தலைநகர் வியன்டியானில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், சீனா சார்பில் டாங் ஜூனும் பங்கேற்றனர். அப்போது பரஸ்பர நம்பிக்கை அடிப்படையில் எல்லை பிரச்னை தொடர்பாக இருநாடுகளும் இணைந்து புதிய அமைதி திட்டத்தை உருவாக்க ஆலோசனை நடத்தப்பட்டது. கைலாஷ் மானசரோவர் யாத்திரையை மீண்டும் தொடங்குவது உள்ளிட்ட இந்தியா-சீனா உறவில் அடுத்த கட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
The post இந்தியா, சீனா அமைச்சர்கள் லாவோஸில் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.