- அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- பாஜக
- Aryana
- சண்டிகர்
- ஷியாம் சிங் ராணா
- பஞ்ச்குலா
- நிலை
- சட்டமன்ற
- சட்டசபை
- ஹரியானா
சண்டிகர்: அரியானா மாநில சட்டப்பேரவை கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்காக பஞ்ச்குலாவில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு, அம்மாநில வேளாண் துறை அமைச்சர் ஷியாம் சிங் ராணா வந்திருந்தார். அவர் பாஜக அலுவலகத்தில் இருந்த லிப்டை பயன்படுத்தியபோது, திடீரென பாதி வழியில் லிப்ட் பழுதாகி நடுவில் சிக்கியது. அமைச்சருடன் நல்வா எம்எல்ஏ ரந்தீர் பனிஹர் உட்பட பலரும் இருந்தனர். இவர்களும் லிப்டில் சிக்கிய தகவல் வேகமாக பரவியது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீட்புக் குழுவினர், லிப்டில் சிக்கியிருந்த அமைச்சர் ஷியாம் சிங் ராணா உள்ளிட்டோருக்கு தண்ணீர் வழங்கினர். சுமார் அரை மணி நேர தீவிர முயற்சிக்கு பிறகு அமைச்சர் உள்ளிட்டோர் பத்திரமாக வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர்.
அமைச்சர் லிப்டில் சிக்கியதால், ஒட்டுமொத்த லிப்டின் செயல்பாடும் நிறுத்தி வைக்கப்பட்டது. லிப்ட் சரி செய்யப்பட்ட பிறகே மக்களுக்கு திறக்கப்படும் என்று போர்டு வைக்கப்பட்டது. லிப்டில் அமைச்சர் சிக்கியதால், லிப்ட் பராமரிப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, லிப்ட் எப்படி நடுவழியில் நின்றது, அது சரியாகப் பராமரிக்கப்படவில்லையா? பெரிய விபத்து நடந்தால் அதற்கு யார் பொறுப்பு? என்ற கேள்விகளும் எழுந்தன. கடந்த 2022ல் திறந்து வைக்கப்பட்ட புதிய பாஜக அலுவலக லிப்ட் பழுதான விவகாரம் மாநில பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post பாஜக கட்சி அலுவலகத்திற்கு வந்தபோது லிப்டில் சிக்கிக் கொண்ட அமைச்சர், எம்எல்ஏ: அரியானாவில் பரபரப்பு appeared first on Dinakaran.