மும்பை: மராட்டிய சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம் அடைந்துள்ள நிலையில் மக்கள் அனைவரும் வாக்களிக்க தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மராட்டிய சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். தானே பகுதியில் அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத்ஷிண்டே குடும்பத்திடருடன் சென்று வாக்களித்தார்.
ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் துணை முதலமைச்சர் தேவிந்திர பட்னாவிஸ் ஆகியோர் நாக்பூரிலும் ஒன்றிய அமைச்சர் பியுஷ் கோயல் மும்பையிலும் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். வாக்களித்த பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி மக்கள் அனைவரும் வாக்களித்து தங்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் மராட்டிய முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மனைவி மற்றும் மகன் ஆதித்யா தாக்கரே உடன் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார். இதே போல பாலிவுட் நடிகர்கள் சுனில் ஷெட்டி, நிகிதா தத்தா, திரைப்பட இயக்குனர் சுபாஷ் கை ஆகியோரும் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
The post மராட்டிய சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்: மக்கள் அனைவரும் வாக்களிக்க தலைவர்கள் வேண்டுகோள் appeared first on Dinakaran.