×
Saravana Stores

நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக் கட்டைகளை வழங்குவதற்கான அரசாணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: நாகூர் தர்கா கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக் கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி திருவிழாவிற்கு, தமிழ்நாடு அரசு சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்கி வருகிறது. அதன்படி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முகாம் அலுவலகத்தில், இந்த ஆண்டிற்கான நாகூர் தர்கா பெரிய ஆண்டவர் கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையை நாகூர் தர்கா தலைமை நிர்வாக அறங்காவலர் சையது முகமது காஜி ஹூசைன் சாஹிப் மற்றும் நாகூர் தர்கா ஆலோசனைக் குழு தலைவர் சையது முகமது கலீபா சாஹிப் ஆகியோரிடம் வழங்கினார்.

இந்நிகழ்வில், வனத்துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம். நாசர், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் செந்தில்குமார், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் விஜயராஜ் குமார், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் னிவாஸ் ரா. ரெட்டி, மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் உறுப்பினர் நாகூர் ஏ.எச். நஜிமுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

The post நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக் கட்டைகளை வழங்குவதற்கான அரசாணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Nagor Dargah Sandalwood Festival ,Chief Minister ,M.K.Stalin ,CHENNAI ,Tamil Nadu ,Nagor Dargah Ganduri Sandalwood festival ,Tamil Nadu government ,Ganduri festival ,Nagor Dharka ,
× RELATED மக்களின் மகிழ்ச்சியால் சிலர் வயிறு எரிகிறார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்