×
Saravana Stores

கிண்டி மருத்துவமனையில் கத்தியால் குத்தப்பட்ட மருத்துவர் பாலாஜி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

சென்னை: கிண்டி பன்னோக்கு மறுத்துவமனையில் நோயாளியின் உறவினரால் கத்தியால் குத்தப்பட்ட மருத்துவர் பாலாஜி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். ஒருவாரமாக கிண்டி மருத்துவமனையில் சிகிச்சையில் மருத்துவர் பாலாஜி இருந்தார். மருத்துவர் பாலாஜி சில நாட்கள் வீட்டில் ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுத்தியுள்ளனர்.

கடந்த வாரம் புதன்கிழமை கிண்டி பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவரை விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தியதில் அரசு மருத்துவர் பாலாஜி காயமடைந்தார். விக்னேஷின் தாயார் புற்றுநோய் முற்றிய நிலையில் கீமோ சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் புற்றுநோயாளிகள் பிரிவில் டாக்டர் பாலாஜி என்பவர் பணிபுரிந்து வந்தார். அவர் வழக்கம் போல் நேற்று பணியில் இருந்தார். அப்போது தனது தாய்க்கு சரியாக சிகிச்சை வழங்கவில்லை என்று கூறி டாக்டர் பாலாஜியை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் அவருக்கு 7 இடங்களில் வெட்டு விழுந்தது.

அரசு மருத்துவமனைக்குள் புகுந்து டாக்டர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புகாரின் பேரில் விக்னேஷ்வரன் மீது சென்னை கிண்டி போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். தற்போது விக்னேஷ் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கத்தியால் குத்தப்பட்ட மருத்துவர் பாலாஜி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். மருத்துவர் பாலாஜி சில நாட்கள் வீட்டில் ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுத்தியுள்ளனர்.

The post கிண்டி மருத்துவமனையில் கத்தியால் குத்தப்பட்ட மருத்துவர் பாலாஜி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் appeared first on Dinakaran.

Tags : Doctor ,Balaji ,Guindy Hospital ,CHENNAI ,Kindi Pannoku Rehospital ,Guindy ,Hospital ,Dr. ,
× RELATED தனது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர் பாலாஜி கூறும் வீடியோ வெளியீடு!