×
Saravana Stores

விழுப்புரத்தில் விபத்தில் நஷ்டஈடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி

விழுப்புரம்: விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பேருந்து விழுப்புரத்தில் ஜப்தி செய்யப்பட்டது. திண்டுக்கல் ஆரோக்கியமேரி தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (47). இவர், கடந்த 2017ம் ஆண்டு, விழுப்புரம் நகராட்சி மேற்பார்வையாளராக பணியாற்றிய போது, கடந்த 5.5.2017 அன்று காலை, மதுரையிலிருந்து திண்டுக்கல் நோக்கி வந்த அரசு பேருந்தில் பயணித்தார். அப்போது அந்த பேருந்து திண்டுக்கல் அருகே அம்மைநாயக்கனூர் பகுதியில் விபத்துக்குள்ளானதில், ஆரோக்கியராஜ் படுகாயமடைந்தார். இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட ஆரோக்கியராஜ், நஷ்டஈடு கோரி, விழுப்புரம் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் அப்போது வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1,88,435 இழப்பீடாக, மதுரை அரசு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி இழப்பீடு வழங்காததால், கடந்த 13.8.2024ம் தேதி ஆரோக்கியராஜ் தரப்பில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி லட்சுமி, பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாகவும், வட்டி தொகை சேர்த்து ரூ.2,93,403 லட்சம் வழங்கவும், அரசு பேருந்தை ஜப்தி செய்யவும், கடந்த 5ம் தேதி உத்தரவிட்டார். இதையடுத்து, நேற்று காலை விழுப்புரம் நீதிமன்ற கட்டளை நிறைவேற்றுனர்கள் வேணுகோபால், ஆரோக்கியராஜ், அவரது வக்கீல்கள் பிரபாகரன், இளங்கோவன் முன்னிலையில், விழுப்புரம் புதிய பஸ் நிலையத்துக்கு வந்த மதுரை அரசு போக்குவரத்து கழக பேருந்தை ஜப்தி செய்தனர்.

The post விழுப்புரத்தில் விபத்தில் நஷ்டஈடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Arogya Raj ,Arogya Meri Street, Dindigul ,Villupuram Municipal Supervisor ,Madurai ,
× RELATED தந்தத்தாலான யானை பொம்மைகள் குறித்து விசாரிக்கப்படும்: அமைச்சர் பொன்முடி