×
Saravana Stores

குன்னூரில் கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் தவித்த குரங்குக்கு வனத்துறை சிகிச்சை

 

குன்னூர், நவ.19: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள சோலடாமட்டம் பகுதியில் கடந்த சில நாட்களாக குரங்குகள் கிராமத்திற்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் அங்கு சில குரங்குகளுக்கிடையே மோதல்கள் ஏற்பட்டு, காயங்களும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில், குரங்கு ஒன்று வலியில் துடித்து கிராமத்திற்குள் சுற்றி வருவதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். நேற்று சோலடாமட்டம் பகுதிக்கு வந்த வனத்துறையினர் குரங்கை பிடிக்க முற்பட்டபோது அருகேயுள்ள தேயிலை செடிகளுக்கிடையே சென்று மறைந்தது.

நீண்ட நேரத்திற்கு பின்பு குரங்கை கண்டுபிடித்து, குன்னூர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை முடியும் வரை பராமரிக்கப்பட்டு மீண்டும் வனப்பகுதியில் விடுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

The post குன்னூரில் கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் தவித்த குரங்குக்கு வனத்துறை சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Forest department ,Coonoor ,Soladamattam ,Nilgiris district ,
× RELATED காளிகேசம் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்துள்ளது வனத்துறை