×
Saravana Stores

பி.என்.புதூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்

 

கோவை, நவ. 19: அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மேற்கு மண்டல பேரவை கூட்டம் கோவை பாப்பநாயக்கன்புதூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மேற்கு மண்டல குழு தலைவர் புஷ்பராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மேற்கு மண்டல குழுவிற்கு தலைவராக தோழர் புஸ்பராஜ், செயலாளராக தோழர் முத்து கிருஷ்ணன், பொருளாளராக பிரவீன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

இக்கூட்டத்தில் ஆர்.எஸ். புரத்தில் முடங்கி கிடக்கும் ஆக்கி மைதான கட்டுமான பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க வேண்டும். பி.என்.புதூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் சந்திரன், மேற்கு மண்டல பொருளாளர் ஜீவா, முன்னாள் மாநிலக் குழு உறுப்பினர் பி.ஆர் வேலு, இளைஞர் அமைப்பின் மாவட்ட தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post பி.என்.புதூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : PN Pudur Corporation High School ,Higher Secondary School ,Coimbatore ,All India Youth Forum West Zone Council ,Communist Party of India ,Papanayakanputur ,West Zone Committee ,President ,Pushparaj. Comrade ,Western Zone Committee ,
× RELATED முத்துப்பேட்டை அரசு பள்ளி மாணவர்கள் புத்தகம் வாசிப்பு