- கூடுதுறை மலைகள், மேட்டுப்பாளையம்
- மேட்டுப்பாளையம்
- Velliangiri
- கூடுதுறை மலைகள்
- வாணபத்ரகாளியம்மன்
- கூடுதுறை மலைகள்
மேட்டுப்பாளையம், நவ.18: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள வன பத்ரகாளியம்மன் கோவில் சாலையில் உள்ள கூடுதுறை மலைப்பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (49). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். மேலும், தனது வீட்டில் 15 வெள்ளாடுகளையும் வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 15ம் தேதி வழக்கம்போல அவரது மனைவி ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுவிட்டு மீண்டும் 4 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளார். தொடர்ந்து ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு உறங்க சென்றுள்ளார்.
நள்ளிரவில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு எழுந்து போய் பார்த்தபோது 2 ஆடுகள் திருடு போனது தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வெள்ளியங்கிரி இது குறித்து மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் சின்னக்காமனன் தலைமையிலான போலீசார் ஆடுகளை திருடியதாக கூடுதுறை மலைப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் சாந்தி நகரை சேர்ந்த 17 வயது சிறுவன் உள்ளிட்ட இரு சிறுவர்களை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். பின்னர், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
The post மேட்டுப்பாளையம் கூடுதுறை மலைப்பகுதியில் 2 ஆடுகளை திருடியதாக சிறுவர்கள் 2 பேர் கைது appeared first on Dinakaran.